ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்: உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய அரசை கண்டித்து

திண்டுக்கல்லில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாவட்ட பொறுப்பாளர் ரஞ்சித் குமார் தலைமை வைத்தார். நிர்வாகிகள் இளஞ்செழியன், முரளி ராஜா, ராம் முன்னிலை வைத்தனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வேல்முருகன் பேசுகையில்; ஒன்றிய அரசு உணவுப் பொருட்களுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதித்துள்ளதை ரத்து செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும், என பேசினார். ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். மாவட்ட மகளிரணி செயலாளர் சசிகலா நன்றியுரை வழங்கினார்.

Related Stories: