அம்மன் ஆட்டோவில் சலுகை மழை

கோவை: அசோக் லேலாண்ட் இலகு  ரக வாகன டீலரான அம்மன் ஆட்டோ, ஆடி மாதத்திற்கும், பருவமழைக் காலத்திற்கும் ஈடுஇணையற்ற சலுகைகளை வழங்கி வருகுகிறது.  அனைத்து எல்சிவி இலகுரக வாகனம் வாங்குவோருக்கு இந்த சலுகை வழங்கப்படுகிறது. தேவையான இடத்தில் சேவையை வாடிக்கையாளர்களின் இடத்திலேயே தர திட்டமிடப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு வெளிப்படையான அனுபவமாக இருப்பதோடு, பயண நேரம், செலவு போன்றவைகளையும் மிச்சப்படுத்தும். அதோடு, நிபுணத்துவம் வாய்ந்தவர்களுடன் பயணிக்கும் அனுபவமும் வாடிக்கையாளர்கள் முன்பதிவின்போது பெறலாம். இந்த மாபெரும் சலுகையை பெற கோவையில் உள்ள அம்மன் ஆட்டோ பிரைவேட் லிமிடெட்டிற்கு வருகை தரலாம். மேலும், விபரங்களுக்கு, 95855-96680 என்ற தொலைபேசி எண்ணிலும்  sales@ammanauto.com என்ற மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம். முத்துக்குமாரசாமி கோயிலில் தூய்மைப்பணி

பல்லடம்: பல்லடம் அருகேயுள்ள மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோயில் வளாகத்தில், திருப்பூரை சேர்ந்த பல்வேறு தன்னார்வ அமைப்பினர் அன்மையில் தூய்மை பணியில் ஈடுபட்டனர். 15க்கும் மேற்பட்டவர்கள் துாய்மை பணியில் ஈடுபட்டு, கோவில் வளாகத்தில் கிடந்த நெகிழி பைகள், பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் உள்ளிட்டவற்றை சேகரித்தனர். 2 மணி நேரம் நடந்த தூய்மை பணியில் 12 மூட்டைகளில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் சேகரிக்கப்பட்டன.

இதில், அதிகப்படியாக தடை செய்யப்பட்ட நெகிழி பைகள், பிளாஸ்டிக் குப்பைகளும் இருந்தன. மொத்தம் 350 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டதாக தன்னார்வ அமைப்பினர் தெரிவித்தனர்.

Related Stories: