×

ராமகிருஷ்ணா கல்லூரியில் மாணவர் ஊக்குவிப்பு நிகழ்ச்சி

கோவை: கோவை நவஇந்தியா-ஆவாரம்பாளையம் சாலையில்அமைந்துள்ள, ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாணவர்களுக்கான ஊக்குவிப்பு நிகழ்ச்சி, கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. தக்சின் பாரத் ஏரியா கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் அருண் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, ‘லீடர்ஷிப் அண்டு ஓனர்ஷிப்’ என்ற தலைப்பில் பேசியதாவது: ‘தலைமைப் பண்பு ன்பது வெற்றியாளர்களின் சிறந்த பண்புகளில் ஒன்று. நமக்கான பாதையில் பயணித்தல், மற்றவர்களை வழிநடத்துதல், நேர்மையாக இருத்தல், நுண்ணறிவு, புதியபாதையை உருவாக்குதல், இலக்கை தீர்மானித்தல், மற்றவர்களை மரியாதையாக நடத்துதல், மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுதல் போன்றவை இதில் அடங்கும். பெரிய வெற்றியை அடைவதற்கு மனிதவளம் மிகவும் அவசியம். நாட்டைப் பாதுகாக்கும் ராணுவத்தில் ஏராளமான ஆயுதங்களும், தளவாடங்களும் இருக்கலாம். ஆனால் அதைப் பயன்படுத்த ராணுவ வீரர்கள்அவசியம்.  என்னால் எதுவும் முடியாது என்று நினைக்கவே கூடாது. ஒருகை, கால் இல்லாதவர்கள் கூட, சாதனை புரிந்து கொண்டிருக்கின்றனர். எந்த செயலை எடுத்துக் கொண்டாலும் அதில் 100 சதவீதம் உழைப்பைப் பயன்படுத்த வேண்டும்’ என பேசினார். இதில், எஸ்என்ஆர் சன்ஸ்அறக்கட்டளை இணைநிர்வாக அறங்காவலர் சுந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் சிவக்குமார்,  அண்ணா ஐ.ஏ.எஸ்.அகாடமி இயக்குநர் முனைவர் பத்மநாபன், ஆங்கிலத் துறைத் தலைவர் முனைவர் கருணாம்பிகை,  பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

Tags : Ramakrishna College ,
× RELATED ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி ஆண்டுவிழா