நேரு பொறியியல் கல்லூரிக்கு தரச் சான்றிதழ்

கோவை: கோவை திருமலையம்பாளையத்தில் செயல்பட்டு வரும் நேரு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி அதன் நீண்ட வரலாற்றில் ஒரு மைல் கல்லை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார குழு சிஜிபிஏ 3.3 3 உடன் மிகவும் மதிப்புமிக்க ஏ + தரச் சான்றிதழை பெற்றுள்ளது.

இது குறித்து நேரு கல்வி குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் கிருஷ்ணதாஸ் மற்றும் முதன்மை கல்வி அதிகாரி கிருஷணகுமார் ஆகியோர் கூறுகையில், ‘நிர்வாகத்தின் ஒரே லட்சியம் நேரு குழும நிறுவனங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது. அந்த கனவு மிக விரைவில் நனவாகும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது,’என கூறினர்.

Related Stories: