ஆடிப்பெருக்கு விழாவையொட்டி கல்லணையில் கரிகாலன் வழிபாடு

திருக்காட்டுப்பள்ளி, ஆக 5: ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு கும்பகோணம் கரிகாலன் வரலாற்று ஆய்வு மையம் சார்பில் கல்லணையில் கரிகாலன் வழிபாடு நடைபெற்றது. கரிகாலன் சபதம் வரலாற்று நாவல் சமர்ப்பணம் செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு கும்பகோணம் இரண்டாம் கட்டளை இயற்கை விவசாயச் சங்கத்தின் தலைவர் கோவி. திருவேங்கடம் தலைமை வகித்தார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ஆட்சிப் பேரவைக் குழு உறுப்பினர் ரேணுகா சூரியகுமார் கல்லணையின் புகழ்பாடும் கவிதை வாசித்தார்.

கரிகாலன் கல்லணை கட்டிய வரலாறு குறித்து கரிகாலன் வரலாற்று ஆய்வு மைய நிறுவனர் ஆதலையூர் சூரியகுமார் சுற்றுலா பயணிகளுக்கு எடுத்துரைத்தார். ஆதலையூர் சூரியகுமார் எழுதிய ‘கரிகாலன் சபதம்’ வரலாற்று நாவல் மீது காவிரி நீர் தெளித்து கல்லணைக்கு அர்ப்பணிக்கப்பட்டது கும்பகோணம் கரிகாலன் வரலாற்று ஆய்வு மைய உறுப்பினர் ரஞ்சித் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: