அம்மாபேட்டை அரசு மருத்துவமனையில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற கோரிக்கை

தஞ்சாவூர், ஆக.5: அம்மாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேங்கியுள்ள மழை நீரை உடன் அகற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுற்றியுள்ள காலி இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.

உடனடியாக சமன் செய்து நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அம்மாபேட்டை பேரூராட்சிக்குட்பட்ட புத்தூர் நடுப்பட்டியில் கீழத்தெரு பகுதியில் ஒத்தையடி பாதையாக இருந்து வருவதை சாலையாக மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கவும், தற்போது மழைக்காலம் என்பதால் டெங்கு நோய் உட்பட பல்வேறு நோய்கள் பரவாமல் இருக்க அம்மாபேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் கொசு ஒழிப்பு மருந்தை தெளிக்கவும், அம்மாபேட்டை சுடுகாட்டை மின் மயானமாக மாற்ற துரித நடவடிக்கை எடுக்கவும் சுடுகாட்டை சுற்றியுள்ள பகுதிகளில் மரக்கன்றுகளை வளர்க்க நடவடிக்கை எடுக்குமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் ராஜாராமன் அம்மாபேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் ஷோபா ரமேஷ் நேரில் கோரிக்கை மனுவை வழங்கினார் .

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தில் ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ், உள்ளிட்ட முன்னணி ஊழியர்கள் கலந்து கொண்டனர் உடனடியாக பேரூராட்சி மன்ற தலைவர் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தார்.

Related Stories: