அஞ்சல் துறையை தனியாருக்கு தாரைவார்க்கும் மத்திய அரசைக் கண்டித்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், ஆக.5: அஞ்சல் துறையைத் தனியாருக்குதாரை வார்க்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து, தேசிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் பெரம்பலூர் தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தேசிய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் விஷ்ணுதேவன் தலைமை வகித்தார். திருவரங்க அஞ்சல் கோட்ட உதவி செயலாளர் விஜய பாலாஜி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் செயல் தலைவர் செல்வகணேசன், சங்க நிர்வாகிகள் சரவணன், வெங்கடேசன் உள்ளிட்ட அஞ்சல்துறை ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.  ஆக-2ம்தேதி முதல் சுதந்தி ர தினமான 15ம்தேதிவரை தினமும் மாலை 6 மணி முதல் இரவு 10மணி வரைக்கும், கோட்டை மேல்சுவரில் 30அடி நீளத்திற்கு மூவர்ண கொடி நிறத்தில் லேசர் வி ளக்குகளால் வெளிச்சம் பா ய்ச்சப்படுகிறது.

Related Stories: