×

பெரம்பலூர் நகரில் பட்டப்பகலில் பயங்கரம் வாலிபர் குத்தி கொலை; 6 பேர் கும்பல் வெறிச்செயல்

பெரம்பலூர்,ஆக.5: பெரம்பலூர் நகரில் முன்விரோதம் காரணமாக 6 பேர் கொண்ட கும்பல் கத்தியால் வாலிபர் கொலை செய்யப்பட்டார். மற்றொருவர் படுகாயமடைந்து மருத்துவமனையி்ல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பெரம்பலூர் நகரில் பெரியார் சிலை பின்புறம் உள்ள திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் கோபால் மகன் வினோத் (28). பெரம்பலூரில் உள்ள செல் போன் கடையில் வேலை பார்த்து வந்தார். பெரம்பலூர் நிர்மலா நகர், பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் துரை மகன் காஞ்சன் என்கிற கார்த்தி (25). டிரைவர் வேலை பார்த்து வருகிறார். இதில் வினோத்தும், கார்த்தியும் நண்பர்கள். இந்நிலையில் நேற்று (4ம் தேதி) மாலை 4.40 மணியளவில் வினோத், கார்த்தி ஆகியோர் பெரம்பலூர் நிர்மலா நகரில் உள்ள மாரியம்மன் கோவிலருகே சாலையோரம் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது 2 பைக்கில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், இருவரும் எதிர்பாராத நிலை யில் சூழ்ந்துகொண்டு, அதி ல் 2 வினோத்தை பிடித்துக் கொள்ள, மற்றொருவர் வினோத்தை கத்தியால் வலது மார்பு உள்ளிட்டப் பகுதிகளில் சரமாரியாகக் குத்தியுள்ளனர். இதில் நுரையீரல் வெளியேறி அங்கேயே உயிரிழந்த வினோத் கோவிலருகே சாலையில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்துள்ளார். இதனை பக்கத்திலிருந்து பார்த்து மிரண்டு போன காஞ்சன் என்கிற கார்த்தி அலறிக்கொண்டே எழுந்து தப் பி யோடியுள்ளார். உடனே 6 பேர் கொண்ட கும்பல் கார்த்தியை துரத்திச் சென்று 20 அடி தூரத்தில் மடக்கி பிடித்து கத்தியால் மார்பில் குத்தியதோடு கைகளில் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். கார்த்தியும் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழவே கொல்ல வந்த கும்பல் பைக்குகளிலேயே ஏறித் தப்பிச் சென்று தலைமறைவாகினர்.

தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் ரத்த வெள் ளத்தில் மயங்கி கிடந்த கார்த்தியை சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசுத் தலைமை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். சாலையில் இறந்து கிடந்த வினோத் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். பொதுமக்கள், தனியார் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், ஆசிரியைகள், அதிகம் நடமாடும் நிர்மலா நகரில் நடந்த படுகொலை சம் பவத்தால் அப்பகுதியினர் மிகுந்த பதற்றத்தில் உள்ளனர். சம்பவம் குறித்து பெர ம்பலூர் டிஎஸ்பி சஞ்சீவ் குமார், இன்ஸ்பெக்டர் முருகே சன் ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் அருகிலுள்ள சிசி- டிவி காட்சிப் பதிவுக ளைக்கொண்டு தப்பியோ டிய கொலைக் குற்றவாளி களை அடையாளம் கண்டு பிடித்தனர். இதில் சந்தேகத்திற்கிடமாக பெரம்பலூர் கம்பன்நகர், பூவாயி என்கிற பூவரசன், வெங்கடேசபுரம் கண்ணன் மகன் பிரித்திகை வாசன், பாரதிதாசன் நகர் பப்லு என்கிற சத்தியமூர்த்தி, ம ணி, பிரத்தீஷ், நவீன் ஆகி ய 6பேர்கள் மீது சந்தேகம் கொண்டு தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Tags : Perambalur ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்