ஆண்டிமடம் அருகே அகத்தீஸ்வரர் கோயிலில் நாயன்மார் சுந்தரருக்கு குரு பூஜை

ஆண்டிமடம், ஆக.5: அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் - விளந்தை கிராமத்தில் மேல அகத்தீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் நாயன்மார்கள் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் ஆகியோருக்கு குரு பூஜை ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று சுந்தரருக்கு குரு பூஜை நடைபெற்றது. இதனை முன்னிட்டு, தர்மசம்வர்த்தினி சமேத மேல அகத்தீஸ்வரர், பிள்ளையார், முருகன், அகஸ்தியரை, தொடர்ந்து நாயன்மார்களில் நால்வர்களான அப்பர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், சுந்தரர் ஆகிய நாயன்மார்களுக்கு சிறப்பு அபிஷேகமும் பல்வேறு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, பக்தர்கள் தேவாரம், திருவாசகம், பெரிய புராணம் பன்னிரு திருமுறைகளை சுமந்து பாடல்களை பாடி கோவில் உள் பிரகாரத்தை வலம் வந்தனர். அதனைத் தொடர்ந்து உற்சவர் சுந்தரர் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு வழிபட்டனர்.

Related Stories: