ஏற்காட்டில் கடும் பனி மூட்டம்

ஏற்காடு, ஆக.5: ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டிற்கு, உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் தினசரி வந்து செல்கின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஏற்காட்டில் கடும் பனி மூட்டத்துடன் கூடிய, சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் குடைகளை பிடித்தபடி, அண்ணா பூங்கா, மான் பூங்கா உள்ளிட்டவற்றை சுற்றிப்பார்த்தனர். தொடர் மழை, பனி மூட்டதால் ஏற்காட்டை சுற்றிப்பார்க்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். ஏற்காட்டிற்கு வந்த வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர்.

Related Stories: