பெரியாண்டிச்சி அம்மன் கோயிலில் இன்று திருவிழா

சேந்தமங்கலம், ஆக. 5: புதுச்சத்திரம் ஒன்றியம் களங்காணி பெரியாண்டிச்சி அம்மன் திருவிழா இன்று நடைபெறுகிறது. இதையொட்டி, காலை அம்மனுக்கு பூச்சாட்டுதல், புள்ள பூஜைக்காரர்கள் அழைத்து வருதல், மதியம் குழி இருசாய் மற்றும் வீரமன்னன் ஆகிய சாமிகளுக்கு, ஆட்டு கிடா வெட்டி பூஜை செய்தல், குழந்தைகளுக்கான வழிபாடு பூஜை உள்ளிட்டவை நடைபெறுகிறது. இரவு பெரியாண்டிச்சி அம்மனுக்கு ஆடு, கோழி, பன்றி வெட்டி முப்பூஜை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா பெரியசாமி, கானேச்சிக்காரர் தேவதாஸ் ராஜா ஆகியோர் செய்து வருகின்றனர். திருவிழாவில் சின்ன களங்காணி, மின்னாம்பள்ளி, புதன்சந்தை, நைனாமலை, கிலாக்குட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

Related Stories: