×

அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றி சிறப்பாக கொண்டாட வேண்டும்; கலெக்டர் வேண்டுகோள்

கிருஷ்ணகிரி, ஆக.5:  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடியேற்றி 75வது சுதந்திரதின பெருவிழாவை சிறப்பாக கொண்டாட வேண்டுமென கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், 75வது சுதந்திரதின பெருவிழாவினை சிறப்பாக கொண்டாடும் வகையில், அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி(ஹர் கர் ஜந்தா) என்ற திட்டத்தினை வரும் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை அனைத்து பஞ்சாயத்து நிறுவனங்கள் மற்றும் அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியினை ஏற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகளின் கூரைகளிலும் தேசியக் கொடியை பறக்க விட வேண்டும். தேசியக் கொடியினை ஏற்றிய பிறகு, அதன் புனிதத் தன்மையைப் பேணும் வகையில், எந்தவித அலட்சியமும், அவமரியாதையும் இன்றி கையாள வேண்டும். தேசியக் கொடிகளை திறந்த வெளியிலோ, குப்பைத் தொட்டியிலோ, வயல் வெளியிலோ எறியக் கூடாது. எனவே, மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் சுய உதவிக்குழுக்களுக்கு ஒத்துழைப்பு நல்கி, 75வது சுதந்திரதின பெருவிழாவினை சிறப்பாக கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா