பல்லடம் நகர திமுக செயலாளர் அமைச்சரிடம் வாழ்த்து பெற்றார்

பல்லடம், ஆக.4: பல்லடம் நகர திமுக செயலாளர் ராஜேந்திரகுமார் தலைமையில் நகர அவைத்தலைவர் எல்.ஐ.சி. க.நடராஜன், துணைச்செயலாளர்கள் நா.வேலுசாமி, வசந்தாமணி மார்க்கெட் தங்கவேல், ஆ.சுப்பிரமணியன், பொருளாளர் குட்டி ப.ஆ.பழனிசாமி, மாவட்ட பிரதிநிதிகள் மு.கதிர்வேல், எம்.கெளஸ் பாஷா, ஆ.அய்யாசாமி ஆகியோர் திருப்பூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், அமைச்சருமான மு.பெ.சாமிநாதன், வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், திருப்பூர் மாநகராட்சி 4வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன் ஆகியோரை சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றனர். பல்லடம் நகர திமுக செயலாளர் ந.ராஜேந்திரகுமார் தலைமையிலான புதிய நகர கழக நிர்வாகிகளுக்கு திமுகவினர் மற்றும் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், பல்லடம் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், சமூக நல அமைப்புகள் நிர்வாகிகள், திரைப்பட நடிகர்கள் நற்பணி மன்றத்தினர், அறம் அறக்கட்டளை நிர்வாகிகள்,  மகளிர் சுய உதவி குழுவினர், லயன்ஸ், ரோட்டரி சங்கங்கள் உள்ளிட்ட பொதுநல தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories: