திருப்பூரில் ஆடிப்பெருக்கு விழா: அம்மன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம்

திருப்பூர், ஆக.4: திருப்பூரில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு கோயில்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர். இதுபோல பூங்காவிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதுபோல அம்மன் வளையல் அலங்காரம் உள்பட பல்வேறு அலங்காரங்களால் அலங்கரிக்கப்பட்டு, அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இந்நிலையில் நேற்று ஆடிப்பெருக்கு என்பதால் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. மாநகரில் புஷ்பா சந்திப்பில் உள்ள பத்ரகாளியம்மன் கோயில், கோர்ட்டு வீதியில் உள்ள போலீஸ் லைன் மாரியம்மன் கோயில், தாராபுரம் ரோடு அருகே உள்ள கோட்டை மாரியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் காலை முதலே சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது. நீண்ட வரிசையில் காத்து நின்று பக்தர்கள் சாமி ரிசனம் செய்தனர்.

Related Stories: