கூடலூர் அரசு கலை கல்லூரியில் நாளை முதல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

கூடலூர், ஆக.4:  கூடலூர் கோழிப்பாலத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நடப்பாண்டுக்கான இளநிலை மற்றும் இளங்கலை பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நாளை (5ம் தேதி) முதல் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், மாநில அளவிலான விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட சிறப்பு ஒதுக்கீட்டிற்க்கும் சேர்ந்து கலந்தாய்வு நடைபெறுகிறது.  8ம் தேதி மேத்தமெடிக்ஸ், பி.எஸ்சி பிசிக்ஸ், பிஎஸ்சி கம்பியூட்டர் சயின்ஸ், பிசிஏ, பி.எஸ்சி இன்பர்மேசன் டெக்னோலாஜி, பி.எஸ்சி ஜாகிரபி, பிஎஸ்சி மைக்ரோபயாலாஜி ஆகிய பாடப்பிரிவுகளுக்கும், 10ம் தேதி இளங்கலை பாடப்பிரிவுகளான பி.பி.ஏ, பி.பி.ஏ(சிஏ), பி.காம், பிகாம் (சிஏ), பி.காம் (ஐடி)ஆகிய பாடப்பிரிவுகளுக்கும், 11ம் தேதி இளங்கலை பாடப்பிரிவுகளான பிஏ ஆங்கில இலக்கியம் மற்றும் பி.எஸ்.டபள்யூ ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகம் இவற்றின் அசல் சான்றிதழ்கள் மற்றும் 5 நகல்கள், 5 புகைப்படங்கள் ஆகியவற்றோடு தங்களது பெற்றோருடன் கலந்து கொள்ள வேண்டும்.  கலந்தாய்வில் கலந்து கொண்டு தேர்வு பெறுபவர்கள் சேர்க்கை கட்டணத்தை அன்றே செலுத்த வேண்டும்.  இரண்டாம் கட்ட கலந்தாய்வு 24,25ம் தேதி இரு நாட்களில் நடைபெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: