விருதுநகர் நகராட்சி முன்பாக அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

விருதுநகர், ஆக. 4: விருதுநகர் நகராட்சி அலுவலகம் முன்பாக அரசு ஊழியர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் கருப்பசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர் வைரவன் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் அரசு விதிகளுக்குப் புறம்பாக தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு ஜூன் மாதம் முதல் பிழைப்பூதியம் வழங்க மறுத்து வருவது, குறிப்பாணைக்கு விளக்கம் அளிக்க ஆவணங்கள் வழங்க மறுப்பது மற்றும் மன்னிப்புக் கடிதம் வழங்க நிர்பந்தம் செய்வதை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வேலைக்கான அனுமதி வழங்க மன்னிப்புக் கடிதம் கோரும் நகராட்சி ஆணையாளரின் ஊழியர் விரோதப் போக்கைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் கோஷமிட்டனர்.

Related Stories: