அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்

அருப்புக்கோட்டை, ஆக. 4: அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. திமுக ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சசிகலா பொன்ராஜ் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சூர்யகுமார், காஜாமைதீன் பந்தே நவாஸ். ஒன்றியக்குழு துணை தலைவர் உதயசூரியன், மேலாளர்கள் மாலதி, ரமேஷ், பொறியாளர்கள் பாண்டியராஜன், முருகன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு: சீனிவாசன்- கஞ்சநாயக்கன்பட்டி சில்லுக்குண்டு ஊரணியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு 50க்கு மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன. விவசாய நிலங்களுக்கு டிராக்டர்கள் செல்ல முடியாத அளவிற்கு பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. 17 ஏக்காpல் 10 ஏக்கர் நிலம் வரை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. சில்லுக்குண்டு ஊரணியில் தண்ணீர் நிரம்பி உள்ளதால் ஆக்கிரமிப்பில் குடியிருக்கும் பொதுமக்கள் மழை காலத்தில் அடித்து செல்லும் நிலையில் உள்ளது. எனவே ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 10 ஏக்கர் இடத்தை வருவாய்துறை மூலம் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வட்டார வளர்ச்சி அலுவலர்- இடத்தை வருவாய்த்துறை மூலம் சர்வே செய்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். கோவிந்தசாமிநாதன்- மழை காலம் ஆரம்பித்து விட்டது. கண்மாய் ஓடைகளை தூர்வார நடவடிக்கை எடுங்கள் வாழவந்தராஜ்- சுக்கில்நத்தம் ரோட்டில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லும் குப்பைகளை தார்பாய் மூடாமல் ரோடு முழுவதும் குப்பைகளை சிதறவிட்டு செல்கின்றனர். சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. லாரிகளில் குப்பைகளை தார்பாய் மூலம் கொண்டு செல்ல நகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்புங்கள். சீனிவாசன்- தும்மக்குளம் கண்மாய் சாக்கடை கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேடாக உள்ளது. தூர்வார நடவடிக்கை எடுங்கள். மேலும் சில்லுக்குண்டு கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால் அதிகாரிகள் மீது வழக்கு தொடர்வேன்.

வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ)- சில்லுக்குண்டு கண்மாய் பகுதியில் பெரிய, பெரிய வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. பாரபட்சம் இன்றி இடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கோவிந்தசாமிநாதன்- பாலையம்பட்டி காமராஜர் நகர் பகுதியில் உள்ள பொதுமக்கள் மின்கட்டணம் செலுத்துவதற்கு அருப்புக்கோட்டைக்கு செல்ல வேண்டி உள்ளது. மேலும் வீடுகளில் பியூஸ் போய்விட்டாலும் அருப்புக்கோட்டைக்கு தான் செல்ல வேண்டி உள்ளது. எனவே பாலையம்பட்டி மின்வாரியத்தோடு காமராஜர் நகர் பகுதியை இணைக்க வேண்டும். ராஜேஸ்வரி- கட்டங்குடி கோவிலாங்குளம் விலக்குகளில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. உயர் மின்கோபுர விளக்கு அமைக்க நடவடிக்கை எடுங்கள். அழகு சக்தி- ஆமணக்குநத்தம் பெரிய கண்மாயில் சீமைக்கருவேல மரம் புதராக வளர்ந்துள்ளது. மேலும் டி.மீனாட்சிபுரம் முதல் ஆமணக்குநத்தம் கண்மாய் வரை முட்புதராக உள்ளது. எனவே கண்மாய்களை தூர்வார வேண்டும் என பலமுறை கூட்டத்தில் கூறியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. சீனிவாசன்- ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்திற்கு அனைத்து துறை அலுவலர்களையும் கண்டிப்பாக வர சொல்லுங்கள். தாலுகா அலுவலகத்திற்கு குறைகளை சொல்ல சென்றால் தாசில்தாரை பார்க்க முடியவில்லை. இவ்வாறு விவாதம் நடந்தது.

Related Stories: