தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சகி ஒருங்கிணைந்த சேவை மையத்தை அமைச்சர் ஆய்வு

ஆண்டிபட்டி, ஆக. 4: ஆண்டிபட்டி அருகே உள்ள தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ், சகி ஒருங்கிணைந்த சேவை மையம் செயல்பட்டு வருகிறது. பொது இடங்களில் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட பெண்களுக்கு அனைத்து விதமான உதவிகள் கட்டணமின்றி இலவசமாக வழங்க இந்த சேவை மையம் செயல்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட பெண்களின் தேவைக்கேற்ப ஒரு நிழற்குடையின் கீழ் அவசர மீட்பு வசதி, மருத்துவ உதவி காவல் துறை உதவி, சட்ட உதவி, உளவியல் ஆலோசனைகள் மற்றும் தற்காலிக தங்கும் வசதி உள்ளிட்டவை இந்த சேவை மையத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஒருங்கிணைந்த சேவை மையத்தை நேற்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சேவை மையத்தில் உள்ள பதிவேடுகள் சமையல் கூடம் படுக்கை வசதி உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார்.இந்தாய்வில் எம்எல்ஏக்கள் ஆண்டிபட்டி மகாராஜன், கம்பம் ராமகிருஷ்ணன், கலெக்டர் முரளீதரன், எஸ்பி பிரவீன் உமேஷ் டோங்ரே, மருத்துவமனை கண்காணிப்பாளர் இளங்கோவன், உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

Related Stories: