×

தேனியில் ரூ. 70 கோடியில் பாலம் கட்டுமானப் பணி துவக்கம்

தேனி, ஆக. 4:தேனி நகர் மதுரை சாலையில் புது பஸ் நிலைய பிரிவு அருகே ரயில்வே கேட் உள்ளது .இப்பகுதியில் மேம்பாலம் அமைப்பதற்கான திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இதன்படி ரூ. 70 கோடி மதிப்பில் இச்சாலையில் உள்ள மேரி மாதா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி அருகில் துவங்கி பென்னிகுக் நகர் திருப்பம் அருகே எவரெஸ்ட் ஓட்டல் வரை உள்ள சாலையில் 1.2 கி.மீ தூரத்திற்கு 2 தூண்களுடன் கூடிய 15 மீட்டர் அகலம் உள்ள நான்கு வழிச்சாலைகளை கொண்ட மேம்பாலம் கட்டப்படுகிறது.முதற்கட்டமாக தேனி நகர் மதுரை சாலையில் சிட்கோ அருகில் இருந்து புது பஸ் நிலைய பிரிவு வரை சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் அமைக்கும் பணி ஆடிப்பெருக்கு நாளான நேற்று துவங்கியது. பணிகள் துவங்கியதையடுத்து, சிட்கோ அருகில் இருந்து புதிய பஸ் நிலைய பிரிவு வரை உள்ள இருவழிச்சாலையில் டிவைடரில் ஒருபுறம் மட்டும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது.

Tags : Honey ,
× RELATED காராமணி பழப்பச்சடி