கைத்தறி நெசவாளர் மருத்துவ முகாம்

மதுரை, ஆக.4: சுதேசி இயக்கம் 1905ம் ஆண்டு ஆக.7ம் தேதி தொடங்கப்பட்டது. அதன் நினைவாக கைத்தறி தொழிலின் முக்கியத்துவம் மற்றும் நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கான பங்களிப்பாக தேசிய கைத்தறி நாள் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் 8வது தேசிய கைத்தறி தின விழா, மதுரை விஸ்வநாதபுரம் மெயின் ரோட்டில் உள்ள ரோட்டரி கிளப் ஹாலில் வரும் 7ம் தேதி நடைபெறுகிறது. கைத்தறி கண்காட்சி மற்றும் நெசவாளர் மருத்துவ முகாம் நடைபெறுகிறது. நெசவாளர்களின் நலம் காக்கும் வகையில் மருந்து வகைகள் ஆய்வுகளுடன் கூடிய மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. மேலும், கொரோனா பூஸ்டர் டோஸ் போடுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கண்காட்சி காலை முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

Related Stories: