×

ஆடிப் பெருக்கை முன்னிட்டு தாலிக்கயிறு மாற்றிய புதுமண தம்பதிகள்

மதுரை, ஆக.4: ஆடிப் பெருக்கை முன்னிட்டு மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் புதுமண தம்பதிகள் தாலி மாற்றிக்கொள்ள குவிந்தனர். ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதங்களில் வரும் வெள்ளிக் கிழமைகளில் அம்மன் கோயில்களில் கூட்டம் அலைமோதி வருகிறது. ஆடி மாதம் 18ம் தேதி ஆடிப்பெருக்காக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் பெண்கள் மாங்கல்யம் பெருக்கி கட்டுவது போன்ற நிகழ்ச்சி நடத்துவது வழக்கம். இதை செய்தால் கணவரின் ஆயுள் அதிகரிக்கும் என்பது ஐதீகம். அதன்படி ஆடிப்ெருக்கான நேற்று கோயில்கள் மற்றும் நீர்நிலை பகுதிகளில் புதுமண தம்பதிகள் மற்றும் சுமங்கலிகள் வழிபட்டு புதுத்தாலி அணிந்து கொண்டனர். இதேபோல் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஏராளமான புதுமண தம்பதிகள் குவிந்தனர். அவர்கள் பொற்றாமரை குளத்தில் வழிபட்டு புதுத்தாலி அணிந்து கொண்டு, அம்மன் மற்றும் சுவாமியை தரிசனம் செய்தனர். இதேபோன்று மதுரை தெப்பகுளம் பகுதியில் முக்தீஸ்வரர், கூடலழகர் பெருமாள், திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மற்றும் அழகர்கோயில் போன்ற பகுதிகளில் புதுமண தம்பதிகள் மற்றும் பக்தர்கள் வழிப்பட்டனர். மேலும், மதுரையில் பல இடங்களில் புதிய வாகனம் வாங்கி கோயில்களில் வைத்து பூஜை செய்து கொண்டனர். இதனால் நகரில் பல இடங்களில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags : Aadi Arupta ,
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ