நிலக்கோட்டை மகளிர் கல்லூரியில் நாளை முதல் கலந்தாய்வு

நிலக்கோட்டை, ஆக. 4:  நிலக்கோட்டை அரசு மகளிர் கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவியர் சேர்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு நாளை ஆக.5ம் தேதி காலை 9 மணி முதல் துவங்கவுள்ளது. முதல் நாளில் சிறப்பு ஒதுக்கீடாக விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள், என்சிசி- மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. அதை ெதாடர்ந்து ஆக.6ம் தேதி வணிகவியல், பொருளாதார பாடப்பிரிவுக்கும், ஆக.8ம் தேதி இளங்கலை தமிழ், ஆங்கில பாடப்பிரிவுக்கும் கலந்தாய்வு நடைபெறும். இந்த கலந்தாய்வுகள் அனைத்தும் கல்லூரி மீட்டிங் காலில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறும்.  கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவியர் கண்டிப்பாக அனைத்து சான்றிதழ்கள், அதன் நகல்கள் மற்றும் 5 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் கொண்டு வர வேண்டு மென கல்லூரி முதல்வர் லதாபூர்ணம் தெரிவித்துள்ளார்.

Related Stories: