×

கனியாமூர் கலவர வழக்கு 148 பேர் ஜாமீன் மனு ஒத்திவைப்பு

விழுப்புரம், ஆக. 4: கள்ளக்குறிச்சி  மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் கலவரத்தில் ஈடுபட்டதாக  கைதானவர்களில் 148 பேர் தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரி தனித்தனியாக  விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல்  செய்துள்ளனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது  மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி, கலவரத்தை வேடிக்கை பார்க்க  சென்றவர்களை போலீசார் கைது செய்துள்ளனர், கலவரத்தில் ஈடுபட்ட உண்மையான  குற்றவாளிகளை கைது செய்யவில்லை, எனவே இவர்கள் 148 பேரின் எதிர்காலம் கருதி  ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதிட்டனர். அதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர்  குறுக்கிட்டு, கலவரத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன, கலவரத்தின்போது  எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரங்களை பின்பற்றியே கைது நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் போலீசாரின் விசாரணை இன்னும் முடியவில்லை,  எனவே அவர்கள் 148 பேருக்கும் ஜாமீன் வழங்கக்கூடாது என்று வாதிட்டார். இதையடுத்து  இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பூர்ணிமா, 148 பேரின் ஜாமீன்  மனு மீதான விசாரணையை வரும் 8ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தர
விட்டார்.

Tags : Kaniyamur riot ,
× RELATED கனியாமூர் கலவரத்தில் காவல்துறையினரை...