கொ.ஆத்தூர்-முத்துகிருஷ்ணாபுரம் இடையே பால பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

முஷ்ணம், ஆக. 4: முஷ்ணம் அருகே கொ.ஆத்தூர், முத்துகிருஷ்ணாபுரம் இடையே வெள்ளாற்று வடிகால் ஓடை பாலம் இருந்தது. இப்பாலம் நெடுஞ்சாலைத்துறை மூலம் அகற்றப்பட்டு, அந்த இடத்தில் புதிய பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதையடுத்து அருகில் தற்காலிக சாலை அமைக்கப்பட்டது. இதன் வழியே வாகனங்கள் மற்றும் பேருந்து ஆகியவை இயங்கி வந்தன. தற்போது பெய்த தொடர் மழையால் தற்காலிக சாலை உடைபட்டு மழைநீர் சென்றதால் அதனை கடந்து அரசு கிராமப்புற பேருந்து மற்றும் பள்ளி வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இந்த பால பணிகள் கடந்த ஓராண்டாக நடைபெற்று முழுமை பெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் தற்காலிக பாலமும் பழுதடைந்துள்ளதால் அப்பகுதி பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதையடுத்து அப்பகுதிவாசிகள் சாலைமறியல் செய்யப்போவதாக முஷ்ணம் வட்டாட்சியர் சேகரிடம் தெரிவித்தனர். இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளரிடம் வட்டாட்சியர் தொடர்பு கொண்டு பேசினார். விரைந்து பக்கவாட்டு சாலை அமைத்து போக்குவரத்து செல்ல வழிவகை செய்வதாகவும். பால பணியினையும் விரைந்து முடிப்பதாக செயற்பொறியாளர் தெரிவித்ததாக வட்டாட்சியர் தெரிவித்தார்.

Related Stories: