×

கும்பகோணம் பகுதியில் இன்று மின்நிறுத்தம்

கும்பகோணம். ஆக.4: கும்பகோணம் மின்வாரிய கோட்ட பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மின் நிறுத்தம் தொடர்பாக மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மாதவன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-கும்பகோணம் கோட்ட பகுதிக்கு உட்பட்ட முள்ளுகுடி மற்றும் குறிச்சி துணை மின் நிலையங்களில் பராமரிப்பு வேலைகள் நடைபெறுவதால் இன்று (4ம் தேதி) வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. அதன்படி, குறிச்சி, கீழக்காட்டூர், காகிதப்பட்டறை. பந்தநல்லூர், கோணுளாம்பள்ளம், முள்ளங்குடி, செருகுடி, புழுதிகுடி,நெய்வாசல், ஆரலூர், பட்டவெளி, கீழமனக்குடி, கயலூர், திருக்கோடிகாவல், குணதலைப்பாடி, துகிலி, பாஸ்கரராஜபுரம், கதிராமங்கலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் மின்சாரம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Kumbakonam ,
× RELATED பேருந்து ஓட்டுனரை தாக்கியவர்களை கைது...