×

தஞ்சாவூரில் அதிமுக உள்ளிட்ட மாற்று கட்சியில் இருந்து திமுகவில் ஐக்கியம்

தஞ்சாவூர், ஆக. 4: தஞ்சாவூர் திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளர் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகரன் முன்னிலையில் 100க்கும் மேற்பட்ட அதிமுக உள்ளிட்ட மாற்று கட்சியினர் திமுகவில் இணைந்தனர்.
தஞ்சாவூர் திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளர் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகரன், திருவையாறு தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் கௌதமன் ஆகியோர் முன்னிலையில் திருவையாறு தெற்கு ஒன்றியம் விண்ணமங்கலம் ஊராட்சி மன்ற தலைவரும் அதிமுக மாவட்ட பிரதிநிதி திருநாவுக்கரசு மற்றும் மாற்று கட்சியிலிருந்து 100க்கும் மேற்பட்ட நபர்கள் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். திமுக வில் இணைந்த அனைவரையும் திமுக கரை போட்ட துண்டை அணிவித்து எம்எல்ஏ துரை.சந்திரசேகரன் வரவேற்றார். மேலும் அவர்களுக்கு திமுக உறுப்பினர் அடையாள அட்டைக்கான படிவங்களை வழங்கினார்.

Tags : Thanjavur ,AIADMK ,DMK ,
× RELATED தஞ்சாவூரில் பட்டப்பகலில் பரபரப்பு...