பிளஸ் 1 மாணவி கர்ப்பம் வாலிபர் போக்சோவில் கைது

சேலம், ஆக. 4: சேலத்தில் பள்ளியில் வயிற்றுவலியால் அவதிப்பட்ட பிளஸ்1 மாணவி கர்ப்பமானது தெரியவந்தது. இதையடுத்து, இதற்கு காரணமான வாலிபரை போலீசார் கைது செய்தனர். சேலம் டவுன் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி, பிளஸ் 1 படித்து வருகிறார். கடந்த 1ம்தேதி பள்ளிக்கு வந்த நிலையில், திடீரென வயிறு வலிப்பதாக கூறினார். இதையடுத்து அவரது பெற்றோரை வரவழைத்த ஆசிரியைகள், மாணவியை அனுப்பிவைத்தனர். பெற்றோர் மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் செய்து பார்த்ததில், சிறுமி 6 வார கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து விசாரித்தபோது, நிலவாரப்பட்டி தென்றல் நகரை சேர்ந்த பிரதாப்(21) என்பவர், சிறுமியை ஏமாற்றி பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இதுகுறித்து டவுன் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேசனில் புகார் செய்யப்பட்டது. போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த போலீசார், பிரதாப்பை கைது செய்தனர்.

Related Stories: