ஆடிப்பெருக்கையொட்டி அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம்

சேலம், ஆக.4: ஆடிப்பெருக்கையொட்டி அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். ஆடிப்பெருக்கையொட்டி நேற்று, சேலம் கோட்டை மாரியம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், குங்குமம், சந்தனம், விபூதி உள்பட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. முகூர்த்தக்காலுக்கு பெண்கள் மஞ்சள் நீர் ஊற்றினர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர். பூட்டு முனியப்பன் கோயிலில் முனியப்பனுக்கு அசைவ உணவால் படையலிட்டு, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. கோயில் வளாகத்தில் ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து முனியப்பனை வழிபட்டனர். சேலம் ஜாகீர் அம்மாபாளையம் காவடி பழனியாண்டவர் கோயிலில் பக்தர்களின் காவடி ஊர்வலம் நடந்தது.

மாமாங்கத்தில் உள்ள ஊற்று கிணற்றில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து செயற்கை நீருற்று அமைக்கப்பட்டது. அதில் ஏராளமானோர் நீராடினர். இதேபோல், சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன், குகை காளியம்மன், மாரியம்மன், அம்மாப்பேட்டை செங்குந்தர் மாரியம்மன், காமராஜர் நகர் காலனி மாரியம்மன், பலப்பட்டரை மாரியம்மன், நஞ்சம்பட்டி மாரியம்மன், பொன்னம்மாப்பேட்டை மாரியம்மன், அன்னதானப்பட்டி மாரியம்மன், சஞ்சீவிராயன்பேட்டை காளியம்மன், சித்ேதஸ்வரா காளியம்மன், குமாரசாமிப்பட்டி எல்லைபிடாரியம்மன் கோயில் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Related Stories: