குமாரபாளையம் திமுக நிர்வாகி நியமனம்

குமாரபாளையம், ஆக.4: குமாரபாளையம் நகர திமுக நிர்வாகிகளை, தலைவர் ஸ்டாலின் ஒப்புதலின் பேரில், தலைமை கழகம் அறிவித்துள்ளது. இதன்படி, குமாரபாளையம் நகர திமுக தலைவராக முன்னாள் நகரமன்ற தலைவர் ஜெகநாதன் அறிவிக்கப்பட்டுள்ளார். நகர செயலாளராக செல்வம், துணைச்செயலாளர்கள் ரவி, பன்னீர்செல்வம், ரேவதி, பொருளாளராக குட்லக் செல்வகுமார், மாவட்ட பிரதிநிதிகளாக ரங்கநாதன், சத்யசீலன், வடிவேல் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகிகளுக்கு வார்டு நிர்வாகிகள், சார்பு அணியினர் வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories: