தென்பெண்ணை ஆற்றில் மக்கள் உற்சாகம்

ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தர்மபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மக்கள் லாரி, டெம்போ, டூவிலர், கார் உள்ளிட்ட வாகனங்களில் குடும்பத்துடன் மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றில் குவிந்தனர். அங்கு புனித நீராடியும், திருமணமான பெண்கள் தாலி மாற்றியும் வழிபாடு நடத்தினர். தொடர்ந்து தென்பெண்ணை ஆற்றங்கரையில் உள்ள மாதேஸ்வரன் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி, ஆயிரகணக்கானோர் கூடியதால் பர்கூர் டிஎஸ்பி மனோகரன், பாரூர் இன்ஸ்பெக்டர் ராஜேஸ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: