ஆடுகள் திருடிய இருவர் கைது

தூத்துக்குடி, ஆக. 4: தூத்துக்குடி லெவிஞ்சிபுரத்தை சேர்ந்தவர் கண்ணன் (52). இவரது ஆடுகளை யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்து கண்ணன், தூத்துக்குடி தென்பாகம் போலீசில் புகார் அளித்தார். எஸ்ஐ சிவக்குமார் வழக்கு பதிந்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி காமிராக்களில் பதிவான காட்சிகள் கொண்டு விசாரணை நடத்தினார். இதில் ஆடுகளை திருடியது, தூத்துக்குடி ராஜபாண்டி நகரை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் முருகன் (29), தங்கசாமி மகன் சின்னதுரை (42) என்பது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், இவர்களிடம் இருந்து ரூ.15 ஆயிரம் மதிப்பிலான ஆடுகளை பறிமுதல் செய்தனர்.

Related Stories: