கலைஞரின் நினைவு தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் மாவட்ட செயலாளர் செல்லத்துரை அறிக்கை

கடையநல்லூர், ஆக.4: கலைஞரின் நினைவு தினத்தை முன்னிட்டு தென்காசி வடக்கு மாவட்டத்துக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்று மாவட்ட செயலாளர் செல்லத்துரை கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து தென்காசி வடக்கு மாவட்ட  திமுக செயலாளர் செல்லத்துரை வெளியிட்ட அறிக்கை : வரும் 7ம் தேதி கலைஞரின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி அன்று காலை 8 மணிக்கு கடையநல்லூரில் மாவட்ட அலுவலகத்தில் வைத்து கலைஞரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.

இதில் மாநில நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், கிளை நிர்வாகிகள், சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

மேலும், கலைஞரின் நினைவு தினத்தை முன்னிட்டு தென்காசி வடக்கு மாவட்டத்துக்குட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர், கிளை வார்டு பகுதிகளில் கலைஞரின் திருவுருவப்படம் அலங்கரிக்கப்பட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: