சுரண்டை காமராஜர் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை கவுன்சலிங் நாளை துவங்குகிறது

சுரண்டை, ஆக.4: சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நாளை துவங்குகிறது என்று முதல்வர் பீர்கான் தெரிவித்தார். இது குறித்து சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) பீர்கான் வெளியிட்ட செய்தி குறிப்பு: அனைத்து பாடங்களுக்கான மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் குழந்தைகள்,  தேசிய மாணவர் படை,  விளையாட்டு ஆகிய சிறப்பு இடங்களுக்கான கலந்தாய்வு நாளை நடக்கிறது. 11ம் தேதி கணிதம், வேதியல், இயற்பியல், கணினி அறிவியல், நுண்ணுயிரியல் ஆகிய அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு நடக்கிறது.

12ம் தேதி வெள்ளிக்கிழமை வணிகவியல், வணிக நிர்வாகவியல், பொருளியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு நடக்கிறது. 13ம் தேதி  தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழி பாடங்களுக்கு கலந்தாய்வுக் கூட்டம் நடக்கிறது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு கூட்டம் இம்மாதம் 18ம் தேதி அனைத்து அறிவியல் பாடப் பிரிவுகளுக்கும், 22ம் தேதி தமிழ் ஆங்கிலம் உட்பட அனைத்து இளங்கலை பாடப் பிரிவுகளுக்கும் நடக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Related Stories: