×

தெற்குகள்ளிகுளம் அதிசய பனிமாதா ஆலய திருவிழாவில் இன்று தேர்பவனி

ராதாபுரம், ஆக. 4: ராதாபுரம் அருகே தெற்குகள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத்தின் 137வது ஆண்டு திருவிழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.  இதையொட்டி 9வது திருவிழாவான இன்று தேர்ப்பவனி நடக்கிறது. இன்று காலை ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் நடைபெறுகின்ற திருப்பலியில் உறுதிப்பூசுதல் வழங்கும் வைபவம் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு இரக்கத்தின் ஆண்டவர் கெபிதிறப்பு விழா நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து பாளையங்கோட்டை மறை மாவட்ட ஆயர் அந்தோணி சாமி தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு மலையாளத்தில் திருப்பலியும் இரவு 12 மணிக்கு திருப்பலியும் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து அதிசய பனிமாதா அன்னையின் அலங்கார தேர்ப்பவனி நடைபெறுகிறது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக பனிமாதா தேரில் வலம் வந்து அருள் வழங்குகிறார்.

இதில் ஏராளமான பக்தர்கள் குருக்கள் கலந்து கொள்கின்றனர். இதை தொடர்ந்து 10ம் திருவிழாவான நாளை 5ம்தேதி அதிகாலை 5.15 மணிக்கு ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடைபெறுகிறது. இதில் வட்டார குருக்கள் கலந்து கொள்கின்றனர். மாலை 3 மணிக்கு அன்னையின் தேர்ப்பவனியும் மாலை 6 மணிக்கு நற்கருணை ஆசீர்வாதமும் நடைபெறுகிறது. வரும் 6ம் தேதி முதல் சனி வழிபாடுகளும் அசன விருந்தும் நடைபெறுகிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா டாக்டர் ஜெபஸ்டின் ஆனந்த், பங்குதந்தை ஜெரால்டுரவி, உதவி பங்குதந்தை சிபு ஜோசப் மற்றும் பங்கு மக்கள் செய்தனர்.

புனித ஆரோக்கிய அன்னை கெபி திறப்பு

தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா திருத்தல சிறப்பு நிகழ்வாக தெற்கு கள்ளிகுளம் அரசு மருத்துவமனை எதிரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள  பயணிகளின் பாதுகாவலி புனித ஆரோக்கிய அன்னை கெபியை ஆயர் ரெத்தினசாமி  அர்ச்சித்து, பனிமாதா பேராலய பங்குத்தந்தை ஜெரால்டு  ரவி, உதவிப்பங்குத்தந்தை சிபுஜோசப் மற்றும் அருட்சகோதரிகளுடன் திறக்கப்பட்டது. நிழ்ச்சியில் தர்மகர்த்தா ஜெபஸ்டின் ஆனந்த், ஜோசப் பெல்சி மற்றும் ஊர் பெரியோர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Therbhavani ,Miraculous Panimatha Temple ,Dushyagallikulam ,
× RELATED குழந்தை தெரசாள் ஆலய தேர்பவனி