×

தொண்டியில் கிரிக்கெட் போட்டி

தொண்டி:  தொண்டி செய்யது முகம்மது அரசினர் மேல் நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சார்பில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. தொண்டியில் செய்யது முகமது அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி முன்னாள் மாணவர்கள் சார்பாக தொண்டி இன்ஸ்பெக்டர் முருகேசன்  தலைமையில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி  நடைபெற்றது. இதில்  24 அணிகள் கலந்து கொண்டது. இந்த போட்டியில் முதலாவது பரிசு ரூ.60 ஆயிரம் மற்றும் கோப்பையை தொண்டி அல் ஹிலால் அணியும் இரண்டாம் பரிசு ரூ.50 ஆயிரம் இளமனூர் அணியும் மூன்றாம் பரிசு ரூ.40 ஆயிரம் காலேஜ் காய்ஸ் அணியும் நான்காம் பரசு ரூ.30 ஆயிரம்  செய்யது முகம்மது ஹைஸ்கூல் அணியும் பெற்றன.

Tags : Thondi ,
× RELATED தொண்டி பகுதியில் வனவிலங்குகளை பாதுகாக்க தண்ணீர் தடாகம் அமைக்க கோரிக்கை