முத்துமாரியம்மன் கோயில் மது எடுப்பு விழா துவக்கம்

காளையார்கோவில்: காளையார்கோவில் கஸ்தூரிபாய் தெரு முத்துமாரி அம்மன் 63ம் ஆண்டு மது எடுப்பு விழா நேற்று காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகம், தீப ஆராதனை நடைபெற்றது. 7ம் தேதி பால் குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து அன்னதானம் நடைபெறும். 9ம் தேதி இரவு வாள்மேல் நடந்த அம்மன் கோவிலில் இருந்து காலை அபிஷேகம் செய்யப்பட்ட புனித நீர் நிரப்பப்பட்ட மதுக்குடத்தை தெப்பகுளத்தின் நான்கு ரதவீதி வழியாக எடுத்து வந்து கோவிலில் வைத்து சிறப்பு அபிஷேகம், தீபஆராதனை, மழைவேண்டி சிறப்பு பூஜைகள் நடைபெறும். 10ம் தேதி காலை 9 மணிக்கு மேல் புனிதநீர், வேப்பஇலை, தென்னம்பாலை கலந்த மதுகுடம் எடுத்து முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக வாள்மேல் நடந்த அம்மன் கோவிலுக்குச் சென்று விசேச பூஜைகள் செய்வதுடன் மதுக்குட நிகழ்வு நிறைவு பெறும்.

Related Stories: