×

செங்கோல் மாதா சப்பர பவனி

தொண்டி: தொண்டி அருகே உள்ள காரங்காடு தூய செங்கோல் மாதா ஆலய சப்பர பவனி நடைபெற்றது. தொண்டி அருகே உள்ள காரங்காடு தூய செங்கோல் மாதா ஆலய தேர் பவனியை முன்னிட்டு கடந்த 23ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. முக்கிய நிகழ்வான தேர்பவனி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. காரங்காடு புதுமை தூய செங்கோல் அன்னை மாதா திருத்தலத்தில் அன்னையின் பெருவிழா நிறைவுத் திருப்பலி அருள்தந்தையர் அருள்பணி அருள் ஜீவா தலைமையில் பங்குப் பணியாளர், காரங்காடு மற்றும் உள்ளூர் அருள்பணியாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. மூன்று சப்பரங்களில் தூய செபஸ்தியார், தூய அந்தோனியார் மற்றும் தூய செங்கோல் மாதா வீதி உலா வந்தனர். கிராமத்தினர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். நேற்று காலை கொடி இறக்கும் நிகழ்வு நடைபெற்றது.Tags :
× RELATED காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து...