கொடைக்கானலில் செஸ் போட்டி

கொடைக்கானல்: கொடைக்கானலில் தாலுகா அளவிலான செஸ் விளையாட்டு  போட்டிகள் நேற்று துவகியது. கொடைக்கானலை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட பள்ளி  மாணவ, மாணவிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இப்போட்டியில் கலந்து கொண்டு  விளையாடுகின்றனர். வகுப்புகள் வாரியாக போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. முதல் பரிசாக ரூ.15 ஆயிரம், 2ம் பரிசாக ரூ.10 ஆயிரம் ரொக்க பரிசும்,  சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன. முன்னதாக செஸ் விளையாட்டு போட்டிகளை  கொடைக்கானல் போலீஸ் டிஎஸ்பி சீனிவாசன் தொடங்கி வைத்தார்.  ஆக.15ம் தேதி வரை  நடக்கும் இந்த செஸ் போட்டிகளை தனியார் ஓட்டல்  உரிமையாளர் ராஜேந்திரன் மற்றும் இவரது குழுவினர் ஒருங்கிணைப்பு  செய்துள்ளனர்.

Related Stories: