நலத்திட்ட உதவி வழங்கும் விழா

அவிநாசி: அவிநாசி அருகே பெருமாநல்லூரில் அன்னை தெரசா மகளிர் தொண்டு நிறுவனம் உள்ளிட்ட ஐந்து தொண்டு நிறுவனங்கள் சார்பில் மகளிர்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. மூத்த வழக்கறிஞர் நாகராஜன் தலைமை தாங்கினார். அன்னை தெரசா மகளிர் தொண்டு நிறுவன இயக்குநர் ராணி முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் பொருத்துதல், மூன்றுசக்கர சைக்கிள் வண்டி, ஆதரவற்ற குழந்தைகளுக்கு மேற்படிப்புக்கான கல்வி உதவித்தொகை, விதவை மற்றும்  கணவனால் கைவிடப்பட்ட மகளிருக்கு வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவும், தையல் மெஷின்கள் உள்ளிட்ட  ரூபாய் ஒரு கோடி மதிப்பீட்டிலான பல்வேறு  நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியின் போது மகளிர் மேம்பாட்டு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியை உழைப்பாளி செந்தில்  ஒருங்கிணைத்தார். இந்த முகாமில், திருப்பூர், கோவை, ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து  தாமரை தொண்டு நிறுவனம், உதயம் தொண்டு நிறுவனம், முத்துமாரியம்மன் தொண்டு நிறுவனம், உழைப்பாளிமுழக்கம் தொண்டு நிறுவனம் மற்றும் பெண்கள் திரளாக பங்கேற்றனர்.

Related Stories: