டாஸ்மாக் தொழிற்சங்கத்தினர் கலெக்டரிடம் மனு

கோவை: கோவை மாவட்ட டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கோவை மாவட்ட கலெக்டர் சமீரனிடம் நேற்று மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் 1,400-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகிறார்கள். தினமும் ரூ.10 கோடிக்கும் மேல் விற்பனை நடந்து வருகிறது. ஆனால், டாஸ்மாக் கடைகளில் மதுபான வகைகளை இருப்பு வைக்க போதுமான இடவசதி இல்லை. இதனால், சில மதுபான வகைகள் அடிக்கடி உடைந்து வருகிறது. மதுபானங்களை குடோனில் இருந்து ஏற்றி வருபவர்கள் அதை கடைக்குள் இறக்கி வைப்பது இல்லை. இதனால், கடை ஊழியர்களுக்கு செலவு ஏற்பட்டு வருகிறது. மேலும், அதிகளவில் விற்பனையாகும் கடைகளில் தேவைக்கு ஏற்ப விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்கள் இல்லை. ஆனால், குறைவாக விற்பனை நடக்கும் கடைகளில் அதிக ஊழியர்கள் உள்ளனர். எனவே, இதை ஆய்வு செய்து அதிகமாக விற்பனை செய்யும் கடைகளில் கூடுதல் ஊழியர்களை நியமிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர்.

Related Stories: