மின்சாரம் தாக்கி இருவர் காயம்

கோவை: கோவை மாநகர் வட்டம் நகரிய கோட்டம் பீளமேடு கிழக்கு பிரிவு அலுவலகம் சின்னசாமி லே அவுட்டில் உள்ள வீடுகளுக்கு, நவஇந்தியா முதல் கள்ளிமடை துணை மின் நிலையம் வரை செல்லும் 110 கேவி உயர் அழுத்த மின் கம்பி செல்கிறது.உயர் அழுத்த மின் கம்பிக்கு கீழே கட்டப்பட்ட வீடுகளுக்கு விதிகளை மீறி கிழக்கு பிரிவு அலுவலர்கள் நேற்று மின் இணைப்பு கொடுக்க முயன்றதாக தெரிகிறது. அப்போது, வீட்டின் உரிமையாளர்களான சின்னசாமி, லேஅவுட் பகுதியை சேர்ந்த பிரபு(32) மற்றும் கார்த்திக்(28) ஆகியோர் மின் ஒயர்களை உயரழுத்த மின் கம்பத்தின் மீது வீசும் போது உயரழுத்த மின்சாரம் தாக்கியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயமடைந்த அவர்களை அப்பகுதி மக்கள் அருகேயுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அத்லெட்டிக் போட்டி துவங்கியது

Related Stories: