×

ஆவணி அவிட்டம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்கப்படுகிறதா? மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

கோவை, ஆக.3: கோவை மாநகராட்சி ரத்தினபுரி ஜி.வி ராமசாமி சாலையில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்கப்படுகிறதா? என மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆய்வு மேற்கொண்டார். அந்த கடைகளில் உள்ள உணவுப் பொருள்களின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து 47வது வார்டுக்கு உள்பட்ட  ரத்தினபுரி பி.எம்.சாமி காலனியில், மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள், மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, மக்களிடம் குப்பைகளை தரம் பிரித்து வழங்கிட விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நகர்நல மையக் கட்டடத்தை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, மத்திய மண்டல உதவி கமிஷனர் சங்கர், உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி, வார்டு உறுப்பினர் பிரபாகரன், உதவி நகரமைப்பு அலுவலர் பாபு, சுகாதார அலுவலர் ராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் சந்திரன் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags : Avani ,
× RELATED மோடி அரசு தரும் நெருக்கடி:...