ஈரோடு டவுன் கிரைம் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

ஈரோடு: ஈரோடு டவுன் போலீஸ் ஸ்டேஷனில் கிரைம் பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்த  செந்தில்குமார், டிஎஸ்பி.,யாக பதவி உயர்வு பெற்று இடம் மாற்றம்  செய்யப்பட்டார்.இதையடுத்து கொடுமுடி போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக  பணியாற்றிய முருகன், டவுன் கிரைம் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டார்.  இதைத்தொடர்ந்து முருகன் நேற்று டவுன் போலீஸ் ஸ்டேஷனில் கிரைம்  இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றுக்கொண்டார்.பின்னர், அவர், ஈரோடு எஸ்பி சசி  மோகனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.புதிதாக பொறுப்பேற்ற  இன்ஸ்பெக்டர் முருகனுக்கு போலீசார் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

Related Stories: