கைத்தறி நெசவாளர்களுக்கு குறைதீர்க்கும் மையம்

ஈரோடு, ஆக. 3: கைத்தறி நெசவாளர்களுக்குத் தேவையான சேவைகளை வழங்குவதற்காகவும், வேலைவாய்ப்பு, கூலி உயர்வு, கைத்தறி துறையின் மூலமாக செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் நெசவாளர்களுக்கு கிடைத்திடவும், மேலும் அவர்களது குறைகளைத் தெரிவிக்கவும் ஏதுவாக கைத்தறி நெசவாளர்கள் குறைதீர்க்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. கைத்தறித் துறை ஆணையரகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த நெசவாளர் குறைதீர்க்கும் மையத்தில், https://gdp.tn.gov.in/dhl எனும்  இணையதளம் மூலமாகவும், wgrcchennai@gmail.com < mailto:wgrcchennai@gmail.com > எனும் மின்னஞ்சல் மூலமாகவும் 24 மணி நேரமும் தங்களது குறைகளைத் தெரிவிக்கலாம். மேலும், அலுவலக வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை, குறை தீர்க்கும் அலுவலர், கைத்தறி ஆணையரகம், குறளகம் 2ம் தளம், சென்னை  104, போன்: 044-2534051 எனும் முகவரியிலும் தெரிவிக்கலாம்.மேலும் தங்களது கோரிக்கை மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்த விவரங்களையும் Petition Status பிரிவு மூலமாகத் தெரிந்து கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Related Stories: