தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் கல்லூரியில் 6,8,10ம் தேதி மாணவிகள் சேர்க்கை கலந்தாய்வு கல்லூரி முதல்வர் தகவல்

தஞ்சாவூர்,ஆக.3: தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் கல்லூரியில் 6,8,10ம் தேதி மாணவிகள் சேர்க்கை கலந்தாய்வு நடைபெறுகிறது என்று குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரி முதல்வர் சிந்திய செல்வி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 2022-2023 ம் கல்வியாண்டிற்கான மாணவி சேர்க்கை தினம் காலை 9 மணிக்கு அனைத்து பாடங்களுக்கும் கலந்தாய்வு வரும் 6ம் தேதி தொடங்குகிறது.இக்கல்லூரிக்கு விண்ணப்பித்த மாணவிகள் அவர்கள் விண்ணப்பிக்கும்போது, அளித்துள்ள கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு சேர்க்கைக்கான விவரங்கள் பகிரப்பட்டுள்ளன.

கல்லூரியில் உள்ள 14 பாடப்பிரிவுகளில் மொத்தம் உள்ள 1224 இடங்களுக்கான மாணவியர் சேர்க்கை நடைபெற உள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையை முன்னிட்டு, கலந்தாய்வு கீழ்க்கண்டவாறு நடைபெறும். மாணவியர் அனைத்து அசல் சான்றிதழ்களையும், நகல்களுடன்,சிறப்புக் கட்டணம் ஆகியவற்றுடன் வரவும்.

வரும்6ம் தேதி சிறப்பு ஒதுக்கீடு விளையாட்டு மாற்றுத்திறனாளி முன்னாள் ராணுவத்தினர் என்.சி சி, 6ம் தேதி பிஏஆங்கிலம், பிகாம் வணிகவியல், கணிதம், கணினி அறிவியல், பாடங்களுக்கும், 8ம் தேதி பிஏ தமிழ், வரலாறு, வணிக நிர்வாகவியல், இயற்பியல், வேதியல், ஆகிய பாடங்களுக்கும், 10ம் தேதி பொருளியல், தாவரவியல், விலங்கியல், புள்ளியியல், புவியியல், ஆகிய பாடப்பிரிவுகளுக்கு நேர்காணலுக்கு மாணவிகள் மட்டுமே கல்லூரி வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவர். மாணவிகள் முகக்கவசம் அணிந்து வர வேண்டும்.

இவ்வாறு கல்லூரி முதல்வர் சிந்திய செல்வி தெரிவித்துள்ளார்.

Related Stories: