×

ஆடிப்பெருக்கை முன்னிட்டு பழம், காய்கள் விற்பனை படுஜோர்

சீர்காழி, ஆக.3: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகர் பகுதியில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பல இடங்களில் புதிதாக தரை கடைகள் அமைக்கப்பட்டு வாழைப்பழம், கொய்யா, மாதுளை, மாம்பழம், பேரிக்காய், விளாம்பழம், வெள்ளரிக்காய், நாவல் பழம், எலுமிச்சை பழம் விற்பனை நடைபெற்றது. இதே போல் காய்கறி கடைகள், மங்கள பொருட்களான மஞ்சள், குங்குமம், கருவேல மணிகடைகள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த கடைகளில் பொதுமக்கள் நேற்று காலை முதல் மாலை வரை கூட்டம் கூட்டமாக வந்து ஆடிப்பெருக்கை முன்னிட்டு காவிரி தாயை வழிபடுவதற்காக தேவையான பழங்கள், காய்கறிகள், மங்களப் பொருட்களை வாங்கி சென்றனர். இந்த ஆண்டு மேட்டூர் அணையிலிருந்து மே 24ம்தேதி முன்கூட்டியே தண்ணீர் திறந்ததால் அனைத்து நீர்நிலைகளிலும் தண்ணீர் செல்வதால் ஆடிப்பெருக்கை பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Padujor ,
× RELATED பாடாலூர் அடுத்த செட்டிகுளத்தில் பலாப்பழம் விற்பனை படுஜோர்