கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் கல்வித்துறை அலுவலக பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கரூர், ஆக. 3: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கல்வித்துறை அலுவலக பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில துணைத்தலைவர் பாரதிதாசன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஜெகநாதன், மாவட்ட செயலாளர் பிரபாகரன், பொருளாளர் சுப்பிரமணி உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். 2021-2022ம் ஆண்டிற்கான ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு பணியிட மாறுதல் வழங்க வேண்டும்.

ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு 2021ம் ஆண்டு மார்ச் 15ம்தேதி நிலவரப்படி வெளியிடப்பட்ட தேர்ந்தோர் பெயர் பட்டியலின்படி பதவி உயர்வுகள் வழங்க வேண்டும். புதிதாக துவங்கப்பட்ட மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு நேர்முக உதவியாளர் மற்றும் கண்காணிப்பாளர் பணியிடங்கள் அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதே கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த அமைப்புகளின் சார்பில் சென்னை பள்ளிக்கல்வி ஆணையரக வளாகத்தில் ஆகஸ்ட் 10ம்தேதி அன்று பெருந்திரள் முறையீடு நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: