கரூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் முதல், மூன்றாவது புதன்கிழமைகளில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்

கரூர், ஆக. 3: கரூர் மாவட்ட எஸ்பி அலுவலகம் சார்பில் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் ஒவ்வொரு மாதம் முதல் புதன்கிழமை மற்றும் மூன்றாவது புதன்கிழமைகளில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த குறைதீர்ப்பு முகாமில், மாவட்ட எஸ்பி, பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்று, அதன் மூலம் பொதுமக்களின் குறைகளை உடனடியாக கண்டறிந்து நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்த மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், மற்றும் அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்களும் கலந்து கொள்கின்றனர். எனவே, பொதுமக்கள் இந்த குறைதீர்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: