தென்மண்டல அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்பு

சாத்தூர், ஆக. 2: சாத்தூர் அருகே, சுப்பிரமணியபுரம் சி.இ.ஓ.ஏ. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சோபுக்காய் கோஜூரியு கராத்தே டூ-இந்தியா சார்பில், தென் மண்டல அளவில் சிறுவர்களுக்கான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நேற்று நடைபெற்றது. மதுரை சி.இ.ஓ.ஏ. மெட்ரிக் பள்ளி தாளாளர் பாக்கியநாதன் தலைமை வகித்து போட்டியை துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக பள்ளி நிறுவனர் ராஜா கிளைமாக்ஸ் பங்கேற்றார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, சிஇஓஏ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பள்ளி முதல்வர் தாட்சியாயினி தேவி பரிசு வழங்கி பாராட்டினர். இதில், 8 மாவட்டங்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 7 வயது முதல் 15 வயது வரையிலான மாணவ, மாணவிகள் 5 பிரிவுகளில் கட்டா, குமித்தே உள்ளிட்ட கராத்தே போட்டிகளில் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர். போட்டிக்கு தலைமை நடுவராக சோபுக்காய் கோஜூரியு கராத்தே பள்ளி இந்திய தலைமை பயிற்சியாளர் மற்றும் தொழில்நுட்ப இயக்குனர் ரென்ஷி சுரேஷ்குமார் செயல்பட்டார். சோபுக்காய் கோஜூரியு கராத்தே பள்ளி நிர்வாகிகள் பாக்யராஜ், அங்குவேல் பாலகாமராஜர், மாரிமுத்துராஜா, சதீஷ் ஆகியோர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கராத்தே பள்ளி, விருதுநகர் மாவட்ட செயலாளர் மற்றும் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளரான செந்தில் செய்திருந்தார்.

Related Stories: