இந்திய ஜனநாயக மாணவர் சங்க பிரசார பயணத்திற்கு வரவேற்பு

சாத்தூர், ஆக. 2: இந்திய ஜனநாயக மாணவர் சங்கம் சார்பில், கன்னியாகுமாரி-காஷ்மீர் ஆகிய இரண்டு இடங்களில் பிரச்சார பயணம் தொடங்கி, இந்தியா முழுவதும் செல்ல திட்டமிட்டுள்ளனர். இதன்படி, சாத்தூருக்கு வந்த பிரசார பயணத்திற்கு விருதுநகர் மாவட்டத்தின் சார்பில் சாத்தூரில் மாவட்ட செயலாளர் ஜோதீஸ்வரன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வாகனத்தில் வந்த இந்திய மாணவர் சங்க மாநில தலைவர் கண்ணன், அகில இந்திய தலைவர் ஷானு, கேரள மாநில தலைவர் அனுஷ்  ஆகியோர் பிரச்சார பயணத்தின் நோக்கம் குறித்து விளக்கம் அளித்தனர். இந்தப் பிரசாரத்தின் கோரிக்கைகளாக இந்திய அரசியலமைப்பு பாதுகாத்தல், கல்வி உரிமை பாதுகாப்பு, கல்வி தனியார் மயக்கலை தடுத்தல், புதிய கல்வி கொள்கை ரத்து செய்தல், நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நாடு முழுவதும் எடுத்துரைக்க தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மாவட்ட தலைவர் பால்பாண்டி நன்றி தெரிவித்தார்.

Related Stories: